இரா. தேவேந்திரன்.September 16, 202612Share
சட்டசபையில் காவல்துறை மானிய கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது முதல்வர் விஜய் பேசுவதற்கு மட்டுமே அனுமதி அளித்தார் என்றும், எதிர்க்கட்சியினர் பேசுவதற்கு அனுமதி அளிக்கவில்லை எனவும் திமுகவினர் குற்றம்சாட்டினர். குறிப்பாக சபாநாயகருக்கு ஒரு துண்டு சீட்டு வந்தது, அதற்கு பிறகு தான் எங்களுக்கு பேச வாய்ப்பு அளிக்கவில்லை என எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினும் குற்றம் சாட்டிய நிலையில் தற்போது ஜேசிடி பிரபாகர் இதற்கு விளக்கமளித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் காவல்துறை மானிய கோரிக்கையின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு முதல்வர் விஜய் பதிலுரை அளித்தபோது எதிர்க்கட்சிகளுக்கு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பேச அனுமதிக்கவில்லை. இதனால் சட்டசபையில் அமர்ந்து திமுகவினர் தர்ணா செய்தனர். தொடர்ந்து திமுகவினர் சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். துண்டு சீட்டைப் பார்த்ததும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினும், சட்டசபையில் எனக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டபோது, சபாநாயகருக்கு ஒரு துண்டு சீட்டு வந்ததாகவும், அந்த துண்டு சீட்டைப் பார்த்தே அவர் பேசுவதற்கான வாய்ப்பை மாற்றிவிட்டதாக குற்றம்சாட்டி இருந்தார். கேள்வி நேரம் அல்லது விவாதத்தின் போது தனக்கு அனுமதி அளிப்பதாகக் கூறிவிட்டு, மேஜை மீது வந்த ஒரு துண்டு சீட்டைப் பார்த்ததும் சபாநாயகர் உடனடியாகப் பேச அனுமதிக்க மறுத்துவிட்டார் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் தான் உதயநிதி ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் வகையில் ஜேசிடி பிரபாகர் விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- துண்டு சீட்டு எழுதி கொடுத்தாலும்.. எந்த துண்டுக்கும், எந்த சீட்டுக்கும் அடிபணிபவன் நான் அல்ல.. நான் மீண்டும் சொல்கிறேன். அவ்வப்போது எனக்கு எழும் சந்தேகங்களை என்னுடைய துறை சார்ந்து இருக்கின்ற சட்டப்பேரவை அலுவலகர்களிடம் இருந்து சில குறிப்புகளை நான் கேட்டு வாங்குவேன். உதாரணத்திற்கு, ஏற்கனவே சர்க்காரியா கமிஷன் பற்றி பேசியிருப்பதும், அமலாக்கத்துறை பற்றி பேசியிருப்பதும் இவை எல்லாம் அவைக் குறிப்பில் இருக்கிறது என்று எனக்கு தெரியும். ஆனால் அது எந்த ஆண்டு? எந்த நாள் இந்த அவையில் பேச வந்தது? என்பதை குறிப்புகள் எடுத்து தாருங்கள் என சொல்லியிருந்தேன்.
மேலும் கண்டறிக
People & Society
South Asians & Diaspora
Language Resources
ஏனென்றால் உடனடியாக விவாதத்திற்கு தயாராகும் போது இது எல்லாம் இருக்க வேண்டும் என்பதற்காக கேட்டிருந்தேன். அதைத் தான் அவர்கள் துண்டு சீட்டில் கொடுத்தார்கள். சபையை எப்படி நடத்த வேண்டும்? யாரை அனுமதிக்க வேண்டும்? யாரை பேச அனுமதிக்க கூடாது என்பதையெல்லாம் யார் எனக்கு துண்டு சீட்டில் எழுதி கொடுத்தாலும் ஏற்கிற மனநிலையில் நான் எப்போதும் இருக்க மாட்டேன் என்பதை தெளிவாக நான் கூறிக்கொள்கிறேன்..” என்றார்.
முக்கிய சூழ்நிலைகள் 4 தொகுதி இடைத்தேர்தல் அப்போது செய்தியாளர்கள் புதிய தலைமை செயலகத்திற்கு எதிர்ப்புகள் வருகிறதே என்று கேள்வி கேட்டனர். இதற்கு பதில் அளித்த ஜேசிடி பிரபாகர், “புதிய தலைமை செயலகம் பற்றிய விவரங்களை அரசு முறையாக வெளியிடும் போது அனைத்து மக்களும் மகிழ்ச்சியடையும் விதத்தில் அந்த திட்டம் அமையும் என நான் நம்புகிறேன்.” என்றார். மேலும் பேசிய ஜேசிடி பிரபாகர், “2 தொகுதிகளுக்கான தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. தேர்தல் நடைபெற இருக்கிறது. மீதி உள்ள 4 தொகுதிகள் பிரச்சனைகள் பற்றி ஆய்வில் வைத்து இருக்கிறோம்.
4 பேரையும் தகுதி நீக்கம் செய்யக் கோரி முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்து இருக்கிறார்கள். விவாதங்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது. விவரங்கள் கேட்கப்பட்டு இருக்கிறது. நேரடியாக விசாரணைக்கு அழைக்கப்பட்டு, முதற்கட்ட விசாரணை முடிந்து இருக்கிறது. அடுத்தக்கட்ட விசாரணைக்காக நாம் காத்திருக்கிறோம். தேதி குறிக்கப்பட்டு, முறையான விரிவான நேரடி விசாரணை நடைபெறும்” என்று கூறினார்.
நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக படுதோல்வியை சந்தித்தது ஆட்சி பிடிக்காது ஐந்து சீட்டு கூட ஜெயிக்காது என்று சொன்ன தமிழக வெற்றிக் கழகம் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.
இதில் போட்டியின்றி சபாநாயகராக ஜே சி டி பிரபாகர் வெற்றி பெற்றார்.
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத புதிய சகாப்தமாக சட்டமன்றத்தின் நிகழ்வுகளை பொதுமக்கள் பார்க்கும்படி லைவாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருக்கிற திமுக எப்படி நடந்து கொள்கிறது எப்படி பேசுகிறார்கள்? ஆளுங்கட்சி எப்படி நடந்து கொள்கிறது எதிர்க்கட்சிகள் எப்படி நடந்து கொள்கிறது என சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
அது மட்டுமல்லாமல் பொதுமக்கள் நேரடியாக சட்டமன்ற நடவடிக்கைகளை பார்ப்பதற்கு கூட்டம் கூட்டமாக சென்று காத்து நிற்கின்றனர் இந்த அடிப்படையில் சபாநாயகராக இருப்பவர் ஒருதலை பச்சமின்றி நீதி அரசரைப் போல நடந்து கொள்ள வேண்டும் என்பது மரபு இந்த நிலையில் ஆனால் சபாநாயகர்களாக பதவியேற்று சட்டசபையை நடத்துபவர்கள் அப்படி நடந்து கொள்ளாமல் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவே நடந்து கொள்வார்கள்.
ஆனால் அதற்கு எதிராக ஜே சி டி பிரபாகர் நடுநிலைமையுடன் யாருக்கும் அஞ்சாமல் சட்டமன்றத்தை மிக நேர்த்தியாக நடத்தி வருகிறார் என்று பொதுமக்கள் அரசியல் விமர்சனங்கள் யாரும் குறை சொல்லாமல் சிறப்பாகவே சட்டசபையை வழிநடத்துகிறார் என்று பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
இதன் அடிப்படையில் திமுகவினர் துண்டு சீட்டு கொடுத்து தங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று மிக கொச்சையாகவும் கேவலமாகவும் சட்டமன்ற மரபுகளை மீறி சபாநாயகரின் மேசையை அருகே சென்று பிரச்சனை செய்து வருகின்றனர் அது கண்டிக்கத்தக்கது நான் துண்டிச்சிட்டுக் எல்லாம் பயந்தவன் அல்ல என்பதை கடும் கோபத்துடன் வெளிப்படையாகவே சபாநாயகர் ஜேசிபி பிரபாகர் பேசி வருவது தான் தமிழக அரசியலில் தற்போதைய பேச்சு.